பொதுத் தேர்தல் தொடர்பில் ராஜபக்சர்களின் வியூகம்
எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டின் பின்னர் பொது தேர்தலுக்கான திகதிகள் அறிவிக்கப்படும் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு சலுகைகள் காரணமாக எதிர்வரும் தேர்தலில் சமகால ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அமைச்சர்கள் சிலர் அறிவித்துள்ளனர்.
இருந்த போதிலும், கிராம மட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்து அதுவல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
கிராம மக்களின் ஆதரவு
புத்தாண்டு முடிவடைந்த பின்னர் பொதுத் தேர்தலுக்கான திகதி நிர்ணயம் செய்யப்படும். பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன பெரும்பான்மையை வெல்லும் என்பதில் உறுதியாக உள்ளோம். பசில் எமது முன்னணியை வழிநடத்த தயாராக உள்ளார்.
அதனை ஏற்றுக் கொண்டவர்கள் எம்முடன் வருவார்கள். பசிலை அழைத்து வருவதற்கு 50க்கும் மேற்பட்ட உறுப்பினர் வந்தார்கள். இது ஒரு நல்ல ஆரம்பம்.
மொட்டு கட்சியில் ரணில் விக்கிரமசிங்க இணைந்து கொண்டால், இரண்டரை லட்சத்தில் 50,000 வாக்குகளை மேலதிகமாக பெற்றுக் கொள்ள முடியும்.
அமைச்சர் பதவியை காப்பாற்ற வேண்டும் என சிலர் முயற்சித்தாலும் கிராம மக்களின் பார்வையாக வேறாகவே உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.