இறக்குமதி - ஏற்றுமதி கட்டுப்பாடு நீக்கப்பட்டால் வெளிவரும் இலங்கை ரூபாவின் உண்மை நிலை! வெளியான தகவல்
இலங்கை ரூபா வலுவடைந்துள்ளதாக கூறினால் போதாது அதனை நடைமுறையில் காட்ட வேண்டும் என இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி டொலரின் பெறுமதி உண்மையில் வீழ்ச்சியடைந்திருந்தால், அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும்.
இவற்றை நீக்கினால், டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதா இல்லையா என்பதை அறிய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் சே்சாளர் நிஹால் செனவிரத்ன கூறுகையில், அமெரிக்க டொலரின் பெறுமதி இவ்வாறு நாளுக்கு நாள் குறைவடைவதன் காரணமாக ஏற்றுமதியாளர்கள் பில்லியன் ரூபா அளவில் நட்டம் அடைகின்றனர்.
டொலரின் பெறுமதி குறைவு
கடந்த 3 நாட்களுக்குள் டொலரின் பெறுமதி 50 ரூபாய் குறைந்துள்ளதோடு அது நூற்றுக்கு பத்து தொடக்கம் 15 வீத டொலரின் பெறுமதி குறைவு. ரூபாவிற்கு இணைந்ததாக டொலரை நிலையாக வைத்திருக்க மத்திய வங்கி தலையிட வேண்டும்.
இந்த நிலைமையை ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், சாதாரண மொத்த வர்த்தகர்கள் போன்று அனைத்து வர்த்தகர்களாலும் தாங்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.