பட்டினி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள இந்தியா வந்தோம்: மேலும் 8 அகதிகள் இந்தியாவில் தஞ்சம் (Video)

Sri Lanka Refugees Sri Lanka Economic Crisis India
By Ashik Aug 27, 2022 08:01 AM GMT
Report

சட்டவிரோதமாக படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில்  குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 8 பேர் மரைன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் மணல் திட்டில் உணவின்றி தவித்து வருவதாக கடற்றொழிலாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இன்று (27) காலை மரைன் பொலிஸார் விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர்களை மீட்டுள்ளனர். 

இவர்கள் நேற்று (26) இரவு ஒரு பைபர் படகில் புறப்பட்டு இன்று (27) அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி ஒன்றாம் மணல் திட்டில் இறங்கியதாக தெரியவந்துள்ளது.


அகதிகளாக சென்ற இலங்கை தமிழர்களிடம் மண்டபம் மரைன் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதுடன், விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜெயந்தி மற்றும் அவரது மூன்று குழந்தைகள், தலைமன்னாரை நேர்ந்த சசிகுமார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் மன்னாரை சேர்ந்த 65 வயது மூதாட்டி இந்துமதி என மொத்தமாக 8 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர் என தெரியவருகின்றது. 

பட்டினி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள இந்தியா வந்தோம்

பட்டினி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள இந்தியா வந்தோம்: மேலும் 8 அகதிகள் இந்தியாவில் தஞ்சம் (Video) | Sri Lanka Refugees In India

”இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை அதிகரித்துள்ளது. விலைவாசி ஒரு பக்கம் உயர்வு, மறுபக்கம் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது, அரசாங்க மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளது.

எனவே பட்டினி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள இலங்கை பணம் 4 லட்சம் ரூபாய் கொடுத்து பைபர் படகில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்து தமிழக முகாம்களில் தங்கியுள்ள தங்களது உறவினர்களுடன் சேர்ந்து வாழலாம்” என தனுஷ்கோடி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 

 தமிழகம் செல்லும் இலங்கை மக்கள் 

பட்டினி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள இந்தியா வந்தோம்: மேலும் 8 அகதிகள் இந்தியாவில் தஞ்சம் (Video) | Sri Lanka Refugees In India

“தங்களை அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும், அதிகாலை முதல் உணவின்றி கடும் சூறைக்காற்றுக்கு மத்தியில் உயிரை பாதுகாத்து கொண்டு தாங்கள் அணிந்திருந்த ஆடைகளை காட்டி அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த கடற்றொழிலாளர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரிய நிலையில் மரைன் பொலிஸார் பத்திரமாக உரிய நேரத்தில் மீட்டனர்.

கால தாமதமாகி இருந்தால் நிச்சயம் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்“ என பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அகதியாக வந்த இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 157 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


Gallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US