2026 இன் ஆசியாவில் 5 முக்கிய சுற்றுலா தளம்! இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
2026 ஆம் ஆண்டிற்கான "ஆசியாவில் பார்வையிட சிறந்த ஐந்து இடங்களில்" ஒன்றாக இலங்கையை யுஎஸ் நியூஸ் அன்ட் வேர்ல்ட் ரிப்போட் பெயரிட்டுள்ளது.
இது, இலங்கையின் சுற்றுலா மீட்சியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.
இலங்கைக்கு அங்கீகாரம்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட குறித்த வெளியீடு, இலங்கையின் பன்முகத்தன்மை கொண்ட சலுகை" மற்றும் உலகளாவிய பயணிகளுக்கு வளர்ந்து வரும் ஈர்ப்பை மேற்கோள் காட்டி, பல நிறுவப்பட்ட பிராந்திய மையங்களை விட இலங்கையை முன்னிலைப்படுத்தியுள்ளது.

அணுகல் மற்றும் மலிவு, கலாசார மற்றும் சமையல் செழுமை உட்பட உலகத் தரம் வாய்ந்த கடற்கரைகள், பண்டைய யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள் மற்றும் முதன்மையான வனவிலங்கு சஃபாரிகள் என்பன இலங்கையை சிறப்பிக்கின்றன.
40 நாடுகளுக்கான புதிய விசா இல்லாத நுழைவுக் கொள்கை மற்றும் ஆடம்பர சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் அழகிய தொடருந்து அனுபவங்களின் விரிவாக்கத்தால்; இந்த அங்கீகாரம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.