உக்ரைன் அமைதியை விரும்பவில்லை என்றால்..புடினின் பகிரங்க எச்சரிக்கை!
உக்ரைன் அமைதியை விரும்பவில்லை என்றால், ரஷ்யா இராணுவ வழியில் அனைத்து சிறப்பு இராணுவ ஒப்பரேசன் இலக்குகளை அடையும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா- உக்ரைன் இடையில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை போர் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போரை முடிவுக்கு கொண்டுவர 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார்.
ஜெலன்ஸ்கி மறுப்பு
இதில் பெரும்பாலான அம்சங்களில் அமெரிக்கா- உக்ரைன் இடையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யாவுக்கு விட்டுக் கொடுப்பதும், ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணுஉலையான சபோரிசியாவை ரஷ்யாவிடம் ஒப்படைக்கவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(28) புளோரிடாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, ஜெலன்ஸ்கி சந்திக்கவுள்ள நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராணுவ வழியில்
இந்த நிலையில்தான் நேற்றையதினம்(27) ரஷ்ய ஜனாதிபதி புடின், அந்நாட்டின் ஆயுதப்படைகள் கமாண்டு மையத்திற்கு திடீரென்று சென்றுள்ளார்.

அங்குள்ள அதிகாரிகளிடம் பேசும்போது "உக்ரைன் அமைதியை விரும்பவில்லை என்றால், ரஷ்யா ராணுவ வழியில் அனைத்து சிறப்பு ராணுவ ஒப்பரேசன் இலக்குகளை அடையும் எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்- ரஷ்யா எல்லையில் பாதுகாப்பு பகுதி தொடக்கம் சிறப்பான நடைபெற்று வருகிறது. ரஷ்யப் படைகள் டான்பாஸ் மற்றும் சபோரோசியே பிராந்தியத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்று சுழற்சி- அடுத்து வரும் சில நாட்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri