திரைப்பட படப்பிடிப்பிற்காக மட்டுப்படுத்தப்படும் மலையக தொடருந்து சேவைகள்
இலங்கை இந்திய கூட்டு முயற்சியில் உருவாக்கப்படும் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மலையக தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படுவதாக இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடவடிகைகளுக்காக நேற்றிலிருந்து (09) எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஒன்பது வளைவுகள் பாலத்தினூடாக, கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து வரும் மலையக தொடருந்து சேவைகள் எல்ல அல்லது பண்டாரவளையில் நிறுத்தப்படும் என இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
படப்பிடிப்பு நடவடிக்கைகள்
காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நாளாந்த தொடருந்து சேவை பதுளை வரை பயணிக்காது.
அதேபோன்று, எதிர் திசையில் செல்லும் தொடருந்துகள் இக்காலப்பகுதியில் பதுளைக்குப் பதிலாக எல்ல அல்லது பண்டாரவளையில் இருந்து புறப்படும்.
இந்த அறிவித்தலின் படி திட்டமிடுமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மலைநாட்டுத் தொடருந்து மார்க்கத்தில் எல்ல மற்றும் தெமோதரை தொடருந்து நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள 9 வளைவு பாலத்தில் இலங்கை - இந்தியக் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்படும் திரைப்பட ஒளிப்பதிவு நடவடிக்கைகளுக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் போக்குவரத்து அமைச்சின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
