வசந்த முதலிகே விவகாரத்தால் இம்முறை ஜெனிவாவில் சிக்குமா இலங்கை அரசாங்கம்

Colombo Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Anti-Govt Protest Sri Lanka Prevention of Terrorism Act
By Rakesh Aug 23, 2022 10:11 AM GMT
Report

ஐ.நா. விசேட அறிக்கையாளர் வேண்டுகோள் விடுத்து 24 மணி நேரத்துக்குள் அதனைப் புறந்தள்ளி தூக்கிக் கடாசிவிட்டு, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தில் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்டுள்ளார்.

இது சர்வதேச சமூகத்தின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாகவே இந்த நடவடிக்கைக்கு சர்வதேச சமூகமும் அதிருப்தியை எதிர்வினையாற்றியுள்ளது.

ரணிலின் நடவடிக்கை 

ranil wickremesinghe

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, செயற்பாட்டாளர் ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் வண. கல்வௌ சிறிதம்ம தேரர் ஆகியோரைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாள்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குப் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.

பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை மாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 19 பேரில் குறித்த மூவரும் அடங்குவர்.

சந்தேகநபர்களில் 15 பேர் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தால் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சந்தேகநபர் ஒருவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனினும், வண. கல்வௌ சிறிதம்ம தேரர், ஹஷந்த ஜீவந்த குணதிலக மற்றும் வசந்த முதலிகே ஆகியோர் பிணையில் விடுவிக்கப்படவில்லை. மாறாக 72 மணிநேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

 ஐக்கிய நாடுகள் சபை

வசந்த முதலிகே விவகாரத்தால்  இம்முறை ஜெனிவாவில் சிக்குமா இலங்கை அரசாங்கம் | Sri Lanka Prevention Of Terrorism Act

இதேவேளை, வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், தடுப்பு காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்றுமுன்தினம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஜனாதிபதி அவ்வாறு கையெழுத்திடுவது இலங்கைக்கு இருண்ட காலமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அப்படியிருந்தும் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க கையெழுத்திட்டமை சர்வதேச சமூகத்தை கொதிப்படையச் செய்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் உடனடியாகவே கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இலங்கையில் ஜனநாயகத்தை சிதைக்கும் செயல்

"பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்காத சட்டங்களைப் பயன்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை சிதைப்பதாக உள்ளது. மக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்கும் உரிமையை உறுதிப்படுத்துமாறு அரசிடம் கோருகின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று இலங்கைக்கான கனேடியத் தூதுவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பனவும் ஜனாதிபதியினதும் அரசினதும் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ளன.

அரசின் இத்தகைய செயற்பாடுகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 51ஆவது கூட்டத் தொடரில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US