இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு

Sri Lankan Peoples President of Sri lanka India Sri Lanka Presidential Election 2024
By Benat Aug 21, 2024 07:36 AM GMT
Report

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் இந்த நாட்டு மக்கள் தீர்மானிக்கும் எதனையும் நாங்கள் மதிப்போம் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

கண்டியில் பௌத்த மதத் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை

இலங்கையின் அடுத்த தலைவர் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயாராக உள்ளது.

இலங்கை மக்களின் தெரிவுகளை மதிப்பது குறித்த இந்தியாவின் உறுதிப்பாட்டையும், இரண்டு நாடுகளில் எவர் ஆட்சி செய்தாலும் வலுவான இருதரப்பு உறவுகளை பேணுவது குறித்த உறுதிப்பாட்டையும் வழங்குகின்றோம்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு | Sri Lanka Presidential Election 2024

இலங்கை மக்களே தெரிவு செய்ய வேண்டியவர்கள், இலங்கை தீர்மானிக்கும், இலங்கை மக்கள் தீர்மானிக்கும் எதனையும் நாங்கள் மதிப்போம்.

மேலும், இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்றுவோம். எங்கள் நட்பு என்பது அனைத்து இலங்கைக்கும், அனைத்து இலங்கையர்களுக்குமானது என சுட்டிக்காட்டினார்.

இந்திய இலங்கை உறவு

இதேவேளை, இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் குறித்துக் கருத்துத் தெரிவித்த இந்தியத் தூதுவர்,

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு | Sri Lanka Presidential Election 2024  

இதற்குச் சில காலம் எடுக்கும். இது நீண்ட திட்டம். இது ஓரிரு வருட திட்டம் இல்லை. எவ்வளவு காலம் நீடிக்கும் எனத் தெரிவிக்க முடியாது.

ஐந்து, ஆறு வருடங்கள் நீடிக்கலாம். இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவதிலேயே இது தங்கியுள்ளது. இதனைப் பரஸ்பர இணக்கப்பாடு புரிந்துணர்வுடனேயே முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

சஜித் அணியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் பதவி விலகல்

சஜித் அணியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் பதவி விலகல்

எமது ஆட்சியில் வறியவர்களுக்கு 10000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்! அனுர

எமது ஆட்சியில் வறியவர்களுக்கு 10000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்! அனுர

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US