ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை
தென்னிலங்கை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமிக்க நபராக காணப்பட்ட முன்னாள் இராணுவ தளபதியும், சமகால ஜனாதிபதி வேட்பாளரான சரத் பொன்சேகாவின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகாவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்சேகாவின் குறித்த கூட்டத்திற்கு ஐந்து பேர் கூட வராதமை பெரும் ஏமாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சார கூட்டம்
மேடையில் பொன்சேகா உட்பட சுமார் 10 பேர் இருந்தனர். மேலும் மேடையின் முன் இருக்கைகளில் யாரும் அமரவில்லை. அத்துடன், பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் தாக்குதலுக்கு உள்ளான காரையும் லொறியில் ஏற்றி மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது.
அதன் காட்சிகளும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தை 5 பேர் மட்டுமே நின்ற நிலையில் பார்த்து விட்டு செல்வதனையும் அவதானிக்க முடிந்துள்ளது.
பொன்சேகாவுக்கு ஏமாற்றம்
இதேவேளை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா, அப்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் சவால்மிக்க நபராக இருந்தார்.
அந்தத் தேர்தலில் 4,173,185 வாக்குகளை பொன்சேகா பெற்றார். அது மொத்த வாக்குகளில் 40.15 வீதமாகும்.
எனினும் 14 வருடங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சரத் பொன்சேகா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.