ராஜபக்ச சகோதரர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
சமகாலத்தில் ராஜபக்சர்களின் முகங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிக்காட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, நேற்று நடைபெற்ற பொதுஜன பெரமுன ஊடகவியலாளர் சந்திப்பில், பின்புறத் திரையில் மொட்டு அடையாளம் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சகோதரர்களின் புகைப்படம் நீக்கம்
எவ்வாறாயினும் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மொட்டு சின்னத்தை தவிர்ந்த மகிந்த - கோட்டாபய - பசில் ஆகிய மூவரின் படங்களையும் காணமுடிந்தது.
இதற்கு முன்னரும் இவ்வாறு கோட்டாபய ராஜபக்சவின் படத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எனினும் அது குறித்து ஊடகங்களில் கடும் விசனம் வெளியிடப்பட்டிருந்தது. அதனையடுத்து மீண்டும் அவரின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பொதுத் தேர்தல்
இந்நிலையில் தற்போது மகிந்த, கோட்டபாய, பசில் ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளன.
விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக தென்னிலங்கையில் பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் மக்கள் மத்தியில் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் இவ்வாறு நடைபெறுவதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்சர்களின் மீது மக்கள் கொண்டுள்ள கடும் வெறுப்பு காரணமாக இவ்வாறு செயற்படுவதாக தெரிய வந்துள்ளது.