இன்னமும் காயாத ரத்தம்!! இலக்கு வைக்கப்பட்ட தமிழர்கள் - மாறாத சிந்தனை

Sri Lankan Tamils Sri Lanka Sri Lankan political crisis S. W. R. D. Bandaranaike
By S P Thas May 27, 2022 06:47 AM GMT
Report

ஈழத் தமிழர்களுடைய வரலாற்றின் அத்தனை பக்கங்களுமே இரத்தத்தால் எழுதப்பட்டவை. அதிலும் குறிப்பாக ஏப்ரல், மே, யூன், யூலை போன்ற மாதங்களைக் கறுப்பு மாதங்களாக பிரகடனப்படுத்துகின்ற அளவிற்குக் கறைபடிந்தவை.

 கிள்ளுக்கீரையாக்கப்படும் தமிழர்கள் 

இன்னமும் காயாத ரத்தம்!! இலக்கு வைக்கப்பட்ட தமிழர்கள் - மாறாத சிந்தனை | Sri Lanka Political History Attack July Riot

காலனியாதிக்கத்திலிருந்து இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பும் சரி பின்பும் சரி தமிழர்கள் கிள்ளுக்கீரையாகவே பார்க்கப்பட்டிருக்கிறார்கள். பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சிங்கள பெரும்பான்மை தலைமைகள் தமிழர் தரப்பை தம்முடைய சுயலாபத்திற்கும் தேவைகளுக்கும் சாதகமாகப் பயன்படுத்துவதற்கு மட்டும் விரும்பினார்களே தவிர, தமிழர்களின் சுதேசிய மரபைகளையும், உரிமைகளையும் மதித்து நடக்க கிஞ்சித்தும் விரும்பவில்லை.

இத்தீவின் பெரும்பான்மையினப் புத்திஜீவிகளாகட்டும், (ஒரு சிலரைத் தவிர) பௌத்த மதகுருமார்களாகட்டும் இலங்கை வாழ் சமூகங்களை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக, மேலும்மேலும் மேல்நிலைவாத - தனிப்பெரும்பான்மைவாத சிந்தனையையே மக்கள் மத்தியில் விதைத்துக்கொண்டிருக்கின்றனர்.

காலனியவாதிகள் இலங்கையின் கையில் சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறியதிலிருந்து இன்றுவரை தமிழர்கள் மீதான இந்த வஞ்சகம் தொடர்ந்து நீடித்தே வருகிறது.

இலங்கை வரலாற்றின் ஆரம்ப காலங்களில் பெரும்பான்மை மக்களின் அரசியல் தலைவர்களாலும், சமூக முன்னோடிகளாலும், வரலாற்றாசிரியர்களாலும் வளர்க்கப்பட்ட இத்தகைய தமிழின வெறுப்பானது மெல்ல மெல்ல நாட்டின் கடைக்கோடி சிங்கள சாமானியனின் மனதிலும் ஆழப்பதிய வைக்கப்பட்டது.

வெறுப்பு அரசியல்

இன்னமும் காயாத ரத்தம்!! இலக்கு வைக்கப்பட்ட தமிழர்கள் - மாறாத சிந்தனை | Sri Lanka Political History Attack July Riot

இத்தகைய வெறுப்பரசியலின் பலனாக காலத்திற்கு காலம் தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் பற்றியெரிந்தன. கலவரங்கள் வெடித்தன. கொலை, கொள்ளை, கப்பம், ஆட்கடத்தல் என்பன சிறுபான்மையினர் சந்திக்கின்ற துயரம் நிறைந்த வழமையான நிகழ்வுகளாக மாறிப்போயின. இந்தப்போக்கு ஒரு சாதாரண சக மனிதன் மீது காட்டவேண்டிய நேசிப்பையும், பாதுகாக்கப்பட வேண்டிய மனித உரிமைகளையும், வாழ்தலுக்கான உரிமையையும் கேள்விக்குட்படுத்துகின்றன. நிலைமை கட்டுக்கடங்காமல் எல்லை மீறி பூதாகரமாக மாறும் ஒரு நாளில் அவை வரலாற்றில் வெறுக்கத்தக்க கறுப்புப் பக்கங்களாக படிந்துவிடுகின்றன.

இலங்கை வரலாற்றிலும் இத்தகைய கறுப்புப் பக்கங்கள் 1956, 1958, 1977, 1981, 1983 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான - காட்டுமிராண்டித்தனமான இனவழிப்பு நடவடிக்கைகளாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

மறுக்கப்பட்ட மொழி உரிமை. மேற்குறித்த வெறுப்பரசியலின் விளைவாக, இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இத்தீவில் வாழும் ஏனைய சமூகங்கள் வேண்டாவெறுப்புடன் நடத்தப்பட்டனர். அக்காலப் பகுதியில் கல்வியிலும், பொருளாதாரத்திலிலும் செழிப்போடு இருந்த தமிழர்கள் குறித்த பயம் அரசுக்கு ஏற்பட்டது. அதனால் எல்லாவிதத்திலுமே பெரும்பான்மை சமூகத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டனர். வஞ்சிக்கப்பட்டனர்.

உரிமைக் குரல் எழுப்பத் தொடங்கிய தமிழ் இனம்

இன்னமும் காயாத ரத்தம்!! இலக்கு வைக்கப்பட்ட தமிழர்கள் - மாறாத சிந்தனை | Sri Lanka Political History Attack July Riot

அடக்குமுறையை தாங்கமுடியாத தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காகக் குரல் எழுப்பத்தொடங்கினார்கள். இலங்கைத் தீவு சிங்கள தேசியத்திற்கானது மட்டுமே என்ற கருத்தாக்கம் ஆளும்தரப்பால் முன்னிலைப்படுத்தப்பட, மறுபுறத்தில் அதனை எதிர்த்துத் தமிழ் தேசிய சிந்தனையும் வளர்ந்தது. அதன்வழி தமிழர்களின் வாழ்வுரிமைகளுக்காக் குரல் கொடுக்க தந்தை செல்வா அவர்கள் 1949 ஆம் ஆண்டில் இலங்கை தமிழரசுக் கட்சியை தோற்றுவித்தார்.

தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழரசுக்கட்சி தமிழர்களின் பேராதரவோடு வெற்றிபெற்றுத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பேசக்கூடிய நாடாளுமன்றத் தரப்பாக வெளிப்பட்டது. சமகாலத்தில் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அரசாங்கம் கொண்டுவரவிருந்த தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்திற்கு வெளியே தமிழரசுக் கட்சி சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடாத்தியது.

பேரினவாதத்திற்கு எதிராக எழுந்த அந்த எதிர்க்குரலை அடக்க அந்த அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. கொலை, கொள்ளை, தமிழர்களின் சொத்துக்களிற்கு தீ வைத்தல் முதலிய அராஜகங்கள் மூர்க்கத்தனமாக ஏவப்பட்டன. இறுதியில், தமிழர் தரப்பின் குரல் கருத்திலெடுக்கப்படாமலேயே பல்லின மக்கள் வாழும் நாட்டில் சிங்கள மேலாதிக்கத்தின் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தனிச் சிங்களச் சட்டம்

இன்னமும் காயாத ரத்தம்!! இலக்கு வைக்கப்பட்ட தமிழர்கள் - மாறாத சிந்தனை | Sri Lanka Political History Attack July Riot

தனிச்சிங்களச் சட்டத்தின் நடைமுறையானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தோற்றுவித்தது. போதாக்குறைக்கு தமிழர் நிலங்களில் தொடர்ச்சியாக சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டமை, தேசிய அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் தமிழர்களின் வளங்கள் சூறையாடப்பட்டு சிங்களவர் வசம் போய்ச்சேர்ந்தமை உள்ளிட்டவை போன்ற தமது உரிமை மறுப்பு தொடர்பில் தமிழர்கள் கோபமடைந்திருந்தார்கள். அவர்களின் அரசியல் பிரதிநிதியாக தந்தை செல்வா தரப்பு இருந்தது.

மக்களின் கோபத்தையும், எதிர்ப்பு அலையையும் கண்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா, தந்தை செல்வாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவது உள்ளிட்ட விடயங்களை ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டார். இதையே வரலாற்றில் பண்டா-செல்வா ஒப்பந்தம் என்கின்றனர். இந்த குழப்பகரமான சந்தர்ப்பத்தை தனது அரசியல் நலனுக்காகப் பயன்படுத்தக் காத்திருந்தார் அப்போதைய எதிர்க்கட்சிதி தலைவரும், ஐ.தே.கவின் தலைவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தன.

பௌத்த பிக்குகளின் ஆதரவுடனும் பேரினவாத அமைச்சர்கள் சிலரின் உதவியுடனும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவின் இந்த ஒப்பந்தத்திற்கு எதிரான சிங்கள பெரும்பான்மைவாத எதிர்ப்பலையை நாடு முழுதும் ஏற்படுத்தினார். குறிப்பாக அந்த ஒப்பந்தத்தை தாங்கியபடி ஒரு சவப்பெட்டி ஊர்வலம் பண்டாரநாயக்காவின் உத்தியோகபூர்வ இல்லம் நோக்கி நடத்தப்பட்டிருந்தது.

தனது செயலுக்கு எதிராக சிங்கள மக்கள் கொந்தளிக்கும் நிலையைப் பார்த்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா அந்த எதிர்ப்பலைக்குப் பயந்து தனது ஒப்பந்தத்தை கைவிடுவதாக அவர்கள் முன்னிலையில் உடனடியாகவே அறிவித்தார். நாட்டுத்தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் இந்தச் செயலானது, நாட்டின் இரு தேசிய இனங்களில் ஒன்றிற்கு உரிமை மறுக்கப்பட்டதாக அரசு பொது வெளியில் பகிரங்கமாக தெரியப்படுத்திய அதேநேரம் மற்றைய இனத்திற்காக எதுவேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதையே சுட்டிக்காட்டியது. அன்றைய இலங்கை அரசாங்கம் செய்த இந்த நம்பிக்கைத் துரோகமானது நாட்டின் ஒருமைப்பாட்டிற்குப் பங்கம் விளைவித்தது. அதன் பின்னர் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரச ஆதரவுடன் சிங்கள பேரினவாத மேலாண்மைவாதமும் அடக்குமுறையும் தமிழர்கள் மீது சர்வசாதாரணமாக நடந்தேறத்தொடங்கியது.

இன அழிப்பு கலவரம்

இன்னமும் காயாத ரத்தம்!! இலக்கு வைக்கப்பட்ட தமிழர்கள் - மாறாத சிந்தனை | Sri Lanka Political History Attack July Riot

இரு இனங்களுக்கிடையிலான இந்தப் பகைமையுணர்வு நாளாக நாளாக கூர்மையடைந்து 1958இல் ஒரு நாடளாவிய ரீதியில் இனஅழிப்புக் கலவரமாக வெடித்தது. பற்றியெரிந்த நாடு. 1956 ஆம் ஆண்டில் தனிச்சிங்கள சட்டம் அமுல்படுத்தப்பட்டதிலிருந்து உடனடியாகவே சிங்கள எக்காளமும் தமிழர்களை இழிவுபடுத்தும் செயற்பாடுகளும் வெகுவிரைவில் தமிழர்கள் மீது இனவழிப்புக் கலவரம் ஒன்று ஏற்படுவதற்கான ஏதுநிலைகள் பற்றி கட்டியம்கூறத் தொடங்கின.

அதே ஆண்டு கிழக்கு மாகாணத்தில் கல்லோயா பகுதியில் 150க்கும் மேற்பட்ட தமிழர்கள் வெட்டியும் அடித்தும் படுகொலைசெய்யப்பட்டனர். இராணுவத்தைக் கொண்டு இவ் இனவன்முறைகள் உடனடியாக தடுத்துநிறுத்தப்பட்டன. 1958 ஆம் ஆண்டு, ஆங்கிலேய கடற்படை திருகோணமலையில் தனது கட்டுப்பாட்டின் கீழிருந்த துறைமுகத்தளத்தை மூடியது. இதனால் அதுவரை அங்கு பணியாற்றி வந்த 400 தமிழ் தொழிலாளர்கள் வேலையிழந்தனர். அவ்வாறு வேலையிழந்தவர்களை, சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பொலநறுவையில் குடியேற்ற அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இக்குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த சிங்களவர்கள், புதிதாகக் குடியேறிய தமிழ் தொழிலாளர்களைத் தாக்கத்தொடங்கினர். 1958ஆம் ஆண்டு வைகாசி மாதம் 22 ஆம் திகதி இரவு கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான இத்தகையை இனவழிப்பு வன்முறைகள் அதே ஆண்டு ஆனி 01 திகதி அவசரநிலைப் பிரகடனம் நடைமுறைக்கு வரும் வரைக்கும் நீடித்தது.

தமிழர்களும் சிங்களவர்களும் அதிகளவாகக் கலந்து வாழும் கொழும்பு, குருநாகல், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள் பற்றியெரிந்தன. யார் தாக்குகிறார்கள், எதற்காக தாக்குகிறார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. மிக மூர்க்கத்தனமான கொலைகளும், கொள்ளைகளும், உடமை எரிப்புக்களும் நடந்தன. அப்பாவித் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்தப் பயங்கரத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் கண்டதுண்டமாக வெட்டிக்கொல்லப்ட்டார்கள். கர்ப்பிணித் தாய்மார்களின் வயிற்றிலிருந்த பிஞ்சுக் குழந்தைகள் கிழித்தெறியப்பட்டன. தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு பலியெடுக்கப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பாணந்துறையில் இந்துக்குருக்கள் ஒருவர் சிங்களக் காடையர்களால் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார். பல்லாயிரம் பேர் வீடு வாசல்களை இழந்தனர். பல கோடி ரூபா பெறுமதியான தமிழரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கட்டுக்கடங்காத பயங்கர இனவெறி நாட்டில் தலைவிரித்தாடிக்கொண்டிருந்தது.

நாட்டின் தலைவரோ எதுவுமே தெரியாதவர் போல ஒரு நாள், முழுதாக 24 மணித்தியாலயங்கள் மௌனம் காத்துவிட்டு மறுநாளே அவசரகால நிலைமையை பிரகடனம் செய்தார். எனினும், 1958 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி பற்றிக்கொண்ட அந்த இனவெறியாட்டம் தணிவதற்குப் பத்து நாட்களுக்கு மேலாகியது. நிலமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தபோது பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாகியிருந்தார்கள்.

நாட்டின் தலைநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வர்த்தகர்களாகவும், உயர் தொழில்நிபுணர்களாகவும் இருந்த பலர் பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் யாழ்ப்பாணத்திற்குக் கப்பலேறினர். பாராமுக அரசு. இந்தக் கொடூர கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 85 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் தமிழர்களாக இருந்தனர். நாட்டின் தலைநகர் கொழும்பிலாகட்டும், அல்லது சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஏனைய பிரதேசங்களிலாகட்டும் தமிழர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது நிரூபணமானது.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதல்முறை இவ்வளவு பெரிதாகத் தமிழரின் இரத்தம் ஆறாய் ஓடிய இந்தக் கலவரத்தை பற்றி அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா குறிப்பிடும் பொழுது,

“நாட்டில் நடைபெற்ற இந்த சம்பவமானது துரதிஸ்டவசமானது. இது மக்கள் மத்தியில் பயப்பீதியை கிளப்பிவிட்டிருக்கின்றது. குறிப்பாக மட்டக்களப்பில் இடம்பெற்ற சம்பவத்தில் நுவரெலியாவின் முன்னாள் மேயர் டி.ஏ செனவிரத்னெ கொல்லப்பட்டுள்ளார். அத்தோடு பொலனறுவை, தம்புள்ளை, குளியாப்பிட்டிய மற்றும் கொழும்பிலும் இது போன்ற பாரிய வன்முறை சம்பவங்கள்; இடம்பெற்றுள்ளன” என்றார்.

இலக்கு வைக்கப்பட்ட தமிழர்கள்

இன்னமும் காயாத ரத்தம்!! இலக்கு வைக்கப்பட்ட தமிழர்கள் - மாறாத சிந்தனை | Sri Lanka Political History Attack July Riot

அந்த நாட்களின் அமைதியின்மை சூழ்நிலையில் தான் செனவிரட்ணவின் மரணம் நிகழ்ந்தேறியது என்றாலும் அவர் மீதான தாக்குதலானது மே 25 ஆம் திகதியே இடம்பெற்றிருந்தது. தவிரவும், அது தனிப்பட்ட விரோதத்தால் நிகழ்ந்தேறிய ஒரு சம்பவமாகவே கூறப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பாகவே மே 22ஆம் திகதியே பொலனறுவை புகையிரத நிலையத்திற்குள் புகுந்த சிங்கள காடையர்கள் அங்கு நின்றிருந்த புகையிரதத்தை அடித்து நொருக்கி, அங்கிருந்த தமிழர்களைத் தேடித்தேடி தாக்கத்தொடங்கினார்கள். அந்த சம்பவத்திலிருந்தே நாட்டின் மற்றைய பிரதேசங்களிலும் வன்முறை தொற்றிக்கொண்டது. இந்த நாடளாவிய வன்முறை தமிழர்களை இலக்கு வைத்தே ஏவப்பட்டிருந்தமையும் அதில் பாதிக்கப்பட்டிவர்களில் 85 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள் என்பதும் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

நிலைமை அப்படி இருக்கையில், இந்த கலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்த நாட்டின் அப்போதைய தலைவர் பண்டாரநாயக்கா அவர்கள், சிங்களவரான செனவிரட்ண பற்றி மட்டுமே ஏன் குறிப்பிட்டார் என்பதற்கு அரச தரப்பிலிருந்து எந்தவித விளக்கமுமே கொடுக்கப்பட்டிருக்கவில்லை.

1958 ஆம் ஆண்டு இனவழிப்புக் கலவரத்திற்குப் பின்பு தமிழர்கள் இரண்டு மிகப்பெரிய இனவழிப்புக் கலவரங்களை சந்தித்துள்ளனர். 1981 ஆம் ஆண்டிலும் 1983 ஆம் ஆண்டிலும் இடம்பெற்ற இனவழிப்புக் கலவரங்களோடு ஒப்பிடுகின்றபோது 1958 ஆம் ஆண்டின் இனவழிப்புக் கலவரமானது ஒரு ஆரம்பம் மட்டும்தான். முறைப்படியான மேடையேற்றத்திற்கு முன்பு ஒத்திகை பார்ப்பது போல, 1983 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இனவழிப்பு வெறியாட்டத்திற்கு 1958 ஆம் ஆண்டிலிருந்தே ஒத்திகைப்பார்க்கப்பட்டது.

கொதிக்கும் தாரில் தூக்கிவீசிக் குழந்தைகளைக் கொல்வது, அரசியற்கைதிகளை சித்திரவதை செய்து கொல்வது, நிர்வாணமாக மானபங்கப்படுத்தி பலியெடுப்பது உள்ளிட்ட புதுப்புது சித்திரவதைக் கொலைகளை 1983 ஆம் ஆண்டுக் கலவரம் தன் பக்கத்தில் பதிவுசெய்திருக்கிறது.

கறுப்பு யூலை என்று தமிழர்கள் மனதில் நின்றுவிட்ட அளவிற்கு அந்த வெறியாட்டம் தமிழர் பிரதேசங்களைப் கிழித்துப்போட்டிருந்தது. எதற்கும் நீதியில்லை இந்த இனவழிப்பின் வரலாறு இன்னமும் நீதியான ஒரு தீர்வுக்கு வரவில்லை. 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த, இலங்கை அரசு பிரகடனப்படுத்திய ‘மனிதாபிமானப் போரில்’ கூட 1958 ஆம் ஆண்டு இனவழிப்புக் கலவரத்தின் பல்வேறு கூறுகள் வெளிப்பட்டன.

போர்விதிகளை மீறியது, சட்டவிரோத ஆயுதங்களை பிரயோகித்தது, சிவிலியன்களையும் சரணடைந்தவர்களையும் காணாமல் ஆக்கச்செய்தது உள்ளிட்ட பல வன்முறைகள் இடம்பெற்றுள்ளன என்பதை பல வெளிநாட்டு ஊடகங்கள் ஆதாரத்துடன் நிரூபித்தன. ஆனாலும் ஆதிக்கத்தின் பக்கத்திலிருந்து பாதிக்கபட்டவர்களிற்கு நீதியை வழங்குவதென்ன, ஒரு சிறு இரங்கலைக்கூட காட்டமுடியவில்லை.

பேரினவாத அரசியல் அதிகாரத்தில், காலாகாலம் மாறிமாறி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி, சிங்கள மேலாதிக்கம் ஒன்றே இலங்கையை உரிமைபெறபோதுமான காரணி என்பதில் அத்தனை அரசாங்கங்களும் தீர்மானமாக இருக்கின்றன. அந்த ஒரு கொள்கையில் மட்டும் அவர்களிற்குள் எந்தவொரு முரண்பாடும் கிடையாது.

தமிழர்கள் மீதான சிங்களவர்களின் வன்முறைக்கு அரசாங்க தரப்பிலிருந்து ஆதரவும், குற்றங்கள் நிரூபிக்கப்படும் தருணங்களில் ஜனாதிபதி பொதுமன்னிப்பும் மிக இலகுவாகவே கிடைத்துவிடும். நேற்று மட்டுமல்ல, நேற்றைக்கு முதல்நாள் மட்டுமல்ல, சிங்கள பேரினவாத எண்ணக்கரு எப்போது இலங்கையில் தோன்றியதோ அப்போதிலிருந்து மீளவும் மீளவும் இத்தகைய இனவழிப்பு சம்பவங்கள் இலங்கையின் நடக்கின்றன. அதற்குப் பிரதான காரணமே, குற்றத்திலீடுபடுபவர்கள் மீது எவ்வித தண்டனைகளும் விதிக்கப்படுவதில்லை என்பதுதான். அரச ஆதரவு முழுதாக கிடைக்கும் என்ற சிங்களவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கைதான்.   

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US