ராஜபக்ச திருட்டு குடும்பத்துக்கு உரிய தண்டனை கிடைத்தே தீரும்! சஜித் திட்டவட்டம்

Sajith Premadasa Sri Lanka Politician Sri Lankan political crisis
By Rakesh Dec 05, 2023 01:06 AM GMT
Report

எனது உயிரை பறித்தாலும் ராஜபக்ச திருட்டு குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த திருட்டு குடும்பத்துக்கு உரிய தண்டனை கிடைத்தே தீரும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை நகரில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மினுவாங்கொட ஜனபவுர மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பொய்யை நம்பி ஏமாற வேண்டாம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,"சில தலைவர்கள் கோப்புகளை தூக்கிக் கொண்டு கூட்டங்களுக்கு வந்து ஊழல் பேரங்கள் குறித்து பேசி ஆட்சிக்கு வந்ததும் தண்டிப்போம் என்று கூறினாலும், ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக இந்நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்ச குடும்பத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தது நாட்டை வங்குரோத்தாக்கியதன் மூலம் அடிப்படை உரிமைகளை மீறினார்கள் என்ற தீர்ப்பை பெற நடவடிக்கை எடுத்தது.

ராஜபக்ச திருட்டு குடும்பத்துக்கு உரிய தண்டனை கிடைத்தே தீரும்! சஜித் திட்டவட்டம் | Sri Lanka Political Crisis Rajapaksa And Sajith

இவை அனைத்தும் நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்.

ஐக்கிய மக்கள் சக்தி கோப்புகளை காட்டி பொய்யான நடவடிக்கைகளை நடத்துவதில்லை.

ஊழலுக்கு எதிராக முன்னிற்கின்றோம் என்று கூறும் சில தரப்பின் பொய்யை நம்பி ஏமாற வேண்டாம். உண்மையாகவும் தூய்மையாகவும் ஐக்கிய மக்கள் சக்தியானது திருடர்களுடன் எந்த டீல்களையும் மேற்கொள்ளவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி திருடர்களை பிடிக்கும் வேலையை ஆரம்பித்துள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நாட்டையே வங்குரோத்தாக்கியவர்களை வெளிக்கொணர முடிந்தது.

தற்போது கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் கையெழுத்து திரட்டும் பணி நடந்து வருகின்றது.

வழக்கின் தீர்ப்பு

இந்த மனுவின் மூலம் நாட்டை வங்குரோத்தாக்கிய 220 இலட்சம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய அனைவருக்கும் எதிராக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு குடியுரிமைகளை இல்லாதொழிக்கும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி பொறுப்பெடுத்துள்ளது.

ராஜபக்ச திருட்டு குடும்பத்துக்கு உரிய தண்டனை கிடைத்தே தீரும்! சஜித் திட்டவட்டம் | Sri Lanka Political Crisis Rajapaksa And Sajith

இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்தில் கருத்துரைக்கும் போது குடும்ப ஆட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள் பல்வேறு தடங்களை ஏற்படுத்தி நாம் கையில் வைத்திருந்த பத்திரங்களைக் கூடப் பறித்தெடுத்தனர்.

எனது உயிரை பறித்தாலும் இந்த திருட்டு குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த திருட்டு குடும்பத்துக்கு உரிய தண்டனை கிடைத்தே தீரும்."என தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிற்கு புலம்பெயர காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவிற்கு புலம்பெயர காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்

30 ஏக்கர் காணியை நிறுவனத்திற்கு வழங்க வேண்டாம்: திருகோணமலையில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

30 ஏக்கர் காணியை நிறுவனத்திற்கு வழங்க வேண்டாம்: திருகோணமலையில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US