றீச்சாவில் மூன்று நாட்கள் கொண்டாட்டம்! பிரமாண்ட உணவுத் திருவிழா இன்று ஆரம்பம்
கிளிநொச்சியில் அமைந்துள்ள றீச்சாவில் இம்மாதம் 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில் மூன்று நாட்கள் பிரமாண்டமான உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது. உணவுப் பிரியர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு சுவையான உணவு வகைகளையும், மகிழ்ச்சியான பொழுதுபோக்கு அனுபவங்களையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என விழா ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உணவுத் திருவிழா
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக இந்த உணவுத் திருவிழா அமையவுள்ளது.
உணவின் சுவையையும், உறவுகளுடன் செலவிடும் இனிய தருணங்களையும் ஒருசேர அனுபவிக்க விரும்புவோர் இந்த விழாவில் கலந்துகொள்ளலாம்.
இந்தப் பிரமாண்ட உணவுத் திருவிழாவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வருகை தந்து, நிகழ்வைச் சிறப்பிக்குமாறு பொதுமக்களுக்கு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.