'வைக்கோல் பட்டறை நாய்' - சஜித்தைச் சாடும் மொட்டு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் செயற்பாடுகள், வைக்கோல் பட்டறை நாய் போல்தான் உள்ளது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிடைத்த வாய்ப்பை சஜித் தவறவிட்டுவிட்டார்
பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த அழைப்பை அவர் ஏற்றிருந்தால் எவ்வித சிரமமும் இன்றி இன்று ஜனாதிபதி ஆகியிருக்கலாம். ஆனால், கிடைத்த வாய்ப்பை அவர் தவறவிட்டுவிட்டார்.
எனவே, சவாலை ஏற்றவருக்கு அவர் வாய்ப்பை வழங்க வேண்டும். அதனைச் செய்யாமல் தற்போது எதிர்ப்பு அரசியலையே நடத்தி வருகின்றார்.
அதாவது வைக்கோல் பட்டறை நாய்
போலவே அவரின் செயற்பாடு அமைந்துள்ளது என்றார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
