அரசாங்கத்திற்குள் கடும் மோதல் - பதவி விலக தயாராகும் இராஜாங்க அமைச்சர்கள்
சமகால அரசாங்கத்திக்குள் அமைச்சு பதவிகள் தொடர்பில் உள்ளக மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை அமைச்சர்கள் தங்கள் கீழ் உள்ள நிறுவனங்களின் பொறுப்புகளை தமது இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்காததால் பெரும்பாலான இராஜாங்க அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
சில அமைச்சர்களுக்கு இரண்டு அல்லது மூன்று அமைச்சுக்கள் என 10, 15 அமைச்சுக்கள் இருந்தாலும், ஓரிரு சிறு நிறுவனங்களைத் தவிர, அரச அமைச்சர்களுக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர்கள் குற்றம் சாட்டு
இதன் காரணமாக அமைச்சுக்களுக்கு சென்று தேவையற்ற வேலைகளை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பல இராஜாங்க அமைச்சர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அமைச்சுக்களில் பொறுப்புக்கள் வழங்கப்படாமையால் சில அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் கருத்து மோதல்களும் ஏற்பட்டுள்ளன.
20 அமைச்சரவை அமைச்சர்களும், 38 இராஜாங்க அமைச்சர்களும் உள்ளனர். 38 இராஜாங்க அமைச்சர்களில் மிகச் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அமைச்சுக்களில் குறிப்பிட்ட பொறுப்புகள் வழங்கப்படவில்லை.
இவர்களில் சுமார் 20 பேர் அரசாங்க அமைச்சுக்களை விட்டு விலகுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
