பாதாளக் குழுவுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் கதறல் : அமைச்சர் நளிந்த
சட்டம் தற்போது உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய தரப்புகளே அரசியல் பழிவாங்கல் என்று விமர்சித்து வருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
குற்றவாளிகள், பாதாள உலகக் குழுவினர், போதைப்பொருள் வியாபாரிகள் ஆகியோரைக் கைது செய்த பின்னர் அவர்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையிலேயே கைதுகள் இடம்பெறுகின்றன.
எவருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை.
இது அரசியல் பழிவாங்கல் அல்ல. அவ்வாறு கூறி சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்க முடியாது. எவருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை. சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கை இடம்பெறுகின்றது.

பாதாள உலகக் குழுக்களை அண்டி இருந்த தரப்புகள்தான் தற்போது அஞ்சுகின்றன. பொலிஸாருக்குத் தேவையான வளங்களையே அரசு வழங்கி வருகின்றது. விசாரணைகளில் தலையிடவில்லை என தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 19 மணி நேரம் முன்
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan