அரசு கையகப்படுத்திய சொத்து - ராஜபக்கசர்கள் தொடர்பில் சர்ச்சை
உரிமையாளர் இல்லாமையினால் கதிர்காமத்தில் உள்ள பெரிய வீட்டை நீர்ப்பாசனத் துறை கையகப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், நீர்ப்பாசனத் துறையுடன் இணைந்து சோதனை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கதிர்காமத்தில் உள்ள இந்த வீடு ஜி. ராஜபக்ஷ என்ற நபருக்கு சொந்தமானது என்று கூறப்பட்டது.
அரசுடமையாக்கப்பட்ட வீடு
எனினும் வீட்டின் உரிமை குறித்து யாரும் முன்வராததால், நீர்ப்பாசனத் துறை வீட்டை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தது.
வீட்டினை சோதனையிட்ட பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், யாருடைய அந்தஸ்தையும் தராதரத்தையும் கருத்தில் கொள்ளாமல் அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்து வீடு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சொந்தமானது என கூறப்பட்ட நிலையில் அவர் அதனை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




