ஜனாதிபதி தேர்தலை பிற்போட வேண்டும்: ஜனாதிபதியின் ஆலோசகர்

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Benat May 31, 2024 10:08 AM GMT
Report

நாட்டை மேலும் அபிவிருத்திச் செய்ய ஜனாதிபதி தேர்தலை நடத்தி, ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesinghe) மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும்.  இல்லையெனில்,  ஜனாதிபதி தேர்தலைக் குறிப்பிட்ட காலத்துக்கு பிற்போட்டு ஜனாதிபதி ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்சென்று நாட்டை முன்னேற்றுவதற்கு ரணிலுக்கு சிறிது காலம் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார மாற்றம் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்க பல்வேறு அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் நடவடிக்கைகளை எடுத்துவந்தார். அவர் எடுத்த கஷ்டமான தீர்மானங்கள் காரணமாகவே குறுகிய காலத்தில் யாரும் எதிர்பார்க்காதவகையில் பொருளாதார ரீதியில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் எதிர்கொண்டுவந்த கஷ்டமும் தற்போது இல்லை.

நாடடின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த வேலைத்திட்டங்களே அதற்கு காரணமாகும். வங்குராேத்து அடைந்துள்ள எமது நாட்டை அந்த நிலையிலிருந்து முழுமையாக மீட்பதற்கு இந்த அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை அவ்வாறே முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

Sri Lankan political crisis

அந்த வேலைத்திட்டங்கள் இடை நடுவில் நிறுத்தப்பட்டால், மீண்டும் நாடு பொருளாதார ரீதியில் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறான நிலையில் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால் அரச இயந்திரங்கள் முறையாக இயங்காது. அபிவிருத்தி திட்டங்கள் இடை நடுவில் நிறுத்தப்படும். அதனால்தான் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு ஒரு யோசனையை முன்வைத்தார்.

அதில் தவறு எதுவும் இல்லை. அவர் இந்த யோசனையை எதிர்க்கட்சிக்கே முன்வைத்தார். ஏனெனில் இதுதொடர்பாக நாடாளுமன்றமே தீர்மானிக்க முடியும். அவ்வாறு இல்லாமல் தேர்தலை ஒத்திவைக்குமாறு அவர் தெரிவிக்கவில்லை. ரங்கே பண்டாரவின் இந்த யோசனைக்கு எதிர்க்கட்சிகள் ஏன் பதற்றமடைய வேண்டும் என கேட்கிறோம்.

ஆரம்பித்திருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் தொடர்ந்து கொண்டுசெல்வதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கே அது தொடர்பான ஞானம் இருக்கிறது. புதிதாக வேறு யாரும் அதிகாரத்துக்கு வந்தால் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போகும்.

எனவே நாட்டை அபிவிருத்தி செய்து முன்னுக்கு கொண்டுசெல்ல இரண்டு தீர்வுகளே இருக்கின்றன. அதாவது, அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்தி, அதில் நாட்டு மக்கள் அனைவரும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்துகொள்ள வேண்டும். அல்லது ஜனாதிபதி தேர்தலைக் குறிப்பிட்ட காலத்துக்கு பிற்போட்டு ஜனாதிபதி ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்சென்று நாட்டை முன்னேற்றுவதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறிது காலம் கொடுக்க வேண்டும்.

இந்த இரண்டு தீர்வுகளைத் தவிர வேறு எந்த தீர்மானங்களை எடுத்தாலும் நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதை யாராலும் தடுக்க முடியாமல் போகும் என குறிப்பிட்டுள்ளார்.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US