அநுர அரசின் அதிரடிகளால் பீதியில் நோயாளிகளாக மாறும் அரசியல்வாதிகள்
இலங்கையில் பல அரசியல்வாதிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைக்கு அழைக்கப்படும் போது நோயாளிகளாக மாறுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய(20.02.2026) அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் நாட்களில் விசாரணை நடக்கும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சமீப காலங்களில், பல முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடை உறவினர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நிதிக் குற்றவியல் பிரிவு உள்ளிட்ட உள்ளிட்ட திணைக்களங்களுக்கு விசாரணைக்காக அழைக்கப்படுகின்றனர்.

எனினும், விசாரணைக்கு அழைக்கப்படுவதற்கு முன்னர் ஆரோக்கியமாக இருக்கும் அவர்கள், விசாரணை தொடர்பான அழைப்பாணை கிடைத்தவுடன் நோயாளிகளாக மாறிவிடுகின்றனர்.
எனவே சபையில் இருக்கும் பலர், உங்ளுக்கு நெருங்கி பலர் மற்றும் அன்பானவர்களை ஆரோக்கியமாக இருக்குமாறு கூறுங்கள். ஏனெனில், எதிர்வரும் நாட்களில் அவர்களில் பலர் விசாரணைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும். அந்தந்த திணைக்களங்களிலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

யாரும் அச்சப்பட வேண்டாம். அதிகமான மேல் நீதிமன்றங்களும் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன. வழக்குகள் தாக்கல் செய்யப்படும். எந்தவொரு ஊழல்வாதியையும் அரசாங்கம் பாதுகாக்கப் போவதில்லை.
உங்கள் நண்பர்களுக்கு கூறுங்கள். வருகைத் தந்து வாக்குமூலம் அளித்துவிட்டுச் செல்ல சொல்லுங்கள். இதன் மூலம் சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகளுக்கு அடுத்த அதிர்ச்சி : உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிரடியாக ட்ரம்ப் விதித்த கூடுதல் வரி
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri