இணையத்தில் அதிகமாக பரவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் காணொளி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
நிகழ்வொன்றின் போது, பலருக்கு மத்தியில் அவர் சிங்கள பாடல் ஒன்றினை பாடும் குறித்த காணொளியே அதிகமாக இணையத்தில் தற்போது வலம் வருகின்றது.
இந்த நிகழ்வின்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் சகோதரரான பிரபல வர்த்தகர் டட்லி சிறிசேன உள்ளிட்ட குடும்பத்தார் கலந்து கொண்டுள்ளதுடன், மைத்திரியின் பாடலை ரசித்து கேட்டுள்ளனர்.
உலக நாடுகளுக்கு அடுத்த அதிர்ச்சி : உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிரடியாக ட்ரம்ப் விதித்த கூடுதல் வரி
அரசியலில் காணவில்லை.....
இதன்போது, அவர் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் பாடலை ரசித்து பாடுவதை பலரும் பாராட்டியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம காலத்தில் செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகியிருப்பது போன்ற தோற்றம் தென்படுகின்றது.

அதிகமாக அரசியல் பரப்பில், அரசியல் விவகாரங்களில் அவருடைய பெயர் அடிபடாத அதேசமயம், அரசியல் கூட்டங்கள், அரசியல் விவாதங்களிலும் மைத்திரிபால சிறிசேனவை காண முடிவதில்லை.
கடந்த காலங்களில், சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து ஊடக சந்திப்புக்களில் மைத்திரிபால சிறிசேன கருத்துக்களைத் தெரிவித்து வந்த போதிலும், தற்போது அமைதியான போக்கை கடைப்பிடிப்பதாக தெரிகின்றது.
இவ்வாறான நிலையில், மைத்திரிபாலவின் குறித்த பாடல் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam