சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.. பொலிஸார் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னரும் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து அல்லது ஒளிந்து திரியும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
கால அவகாசம்..
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 60ஆம் பிரிவின் கீழ், பிடியாணையைத் தவிர்த்து வரும் ஒரு நபர் குறித்த இடத்திலும் நேரத்திலும் முன்னிலையாக வேண்டும் எனக் கோரி, குறைந்தபட்சம் 30 நாட்கள் அவகாசம் அளித்து நீதிமன்றம் எழுத்துப்பூர்வ பிரகடனத்தை வெளியிட முடியும்.

இவ்வாறான பிரகடனம் வெளியிடப்பட்ட பின்னரும் குறித்த நபர் முன்னிலையாக தவறினால், 61 ஆம் பிரிவின் கீழ், அந்நபருக்குச் சொந்தமான அசையும் அல்லது அசையாச் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான கட்டளையை நீதிமன்றம் பிறப்பிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.