திலீபன் சிலை விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது..! என்பிபி தரப்பின் முக்கிய விளக்கம்
தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கும் அரசாங்கத்திற்கும் நேரடித் தொடர்பு இல்லை என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர்,
சிலை அமைக்கப்பட்ட இடம் மற்றும் அதற்கான அனுமதி உள்ளிட்ட விடயங்கள் மாநகர சபையின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவை எனவும், அனுமதி காலம் நிறைவடைந்ததன் பின்னரே சிலை அகற்றப்பட்டுள்ளது.
திலீபன் சிலை விவகாரத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்தக் கூடாது.
வடக்கு மற்றும் கிழக்கில் இனவாத அரசியலுக்கு பதிலாக அபிவிருத்தி சார்ந்த அரசியலுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
குறிப்பாக வடக்கு மாகாணத்தின் விவசாயம், குளங்கள் புனரமைப்பு, தொழில் வாய்ப்புகள், கல்வி மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.
முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...