தவறான செயலில் ஈடுபட்ட அரகலய போராட்டக்கள முக்கியஸ்தருக்கு நேர்ந்த கதி
பாணந்துறை பிரதேசத்தில் நடமாடும் பாலியல் தொழிலாளர் நிலையமொன்றைக் கண்டறிந்து அதனுடன் தொடர்புடையவர்களை அப்பகுதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (21.05.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
"அரகலய" போராட்டக்களத்துடன் தொடர்புடைய முக்கியஸ்தர் ஒருவரின் தலைமையிலான கும்பலொன்றே இந்த நடமாடும் பாலியல் தொழிலாளர் நிலையத்தை நடத்தி வந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வாகனமொன்றில் பெண்களை வைத்துக் கொண்டு, உயர்மட்ட வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு இணங்க இட்டத்துக்கிடம் பெண்களை அழைத்துச் சென்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.
போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்
இச்சம்பவம் குறித்து பாணந்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இவர்களைக் கைது செய்துள்ளனர்.
இதன்போது "அரகலய" போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர் ஒருவரும், நான்கு பெண்களும் வாகனத்தில் இருந்துள்ளனர். அவர்களிடம் சேவை பெற வந்த இரண்டு ஆண்களும் அவ்விடத்தில் நின்றுள்ளனர்.
மொத்தமாக ஏழு பேரையும் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களை இன்றைய தினம் (22.05.2023) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
