மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் இருவர் துப்பாக்கியுடன் கைது
மொட்டுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் பியகம பிரதேச சபை உறுப்பினர் பலட்டுவ விதானகே சுஜித் ஹர்ஷன மற்றும் தற்போது பதவியில் இருக்கும் உறுப்பினர் மத்தும லியனகே சுபாசன பிரபாத் ஆகியோரே சபுகஸ்கந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலாளி ஒருவரை அச்சுறுத்தி
செங்கல் தொழிலாளி ஒருவரை அச்சுறுத்தி மிரட்டியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட பலட்டுவ விதானகே சுஜித் ஹர்ஷன, இல 253/22, சாந்தி மாவத்தை, மாகோல தெற்கிலும், அதே நேரத்தில் மத்தும லியனகே சுபாசன பிரபாத் இல 320/05, மாகோல தெற்கு, மாகோலவில் வசிப்பவர்களாவர்.

இவர்களிடம் இருந்து AK.L.X 565 காலிபர் கொண்ட GLOOK 19 GEN 5 வகை 9×19 பிஸ்டல், 09 தோட்டாக்கள் மற்றும் CAW 5489 என்ற இலக்கத்தை கொண்ட BMW கார் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |