அதிரடியாக குறைக்கப்படும் மருந்து பொருட்களின் விலைகள்
எதிர்வரும் வியாழக்கிழமை முதல் மருந்துப் பொருட்களின் விலையை 16 சதவீதத்தால் குறைப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மருந்துப் பொருட்களின் விலைகளை மீளாய்வு செய்து விலையைத் திருத்தியமைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தற்போது சவால்மிக்க காலகட்டத்தை சமாளித்து சுகாதார சேவையை மிகவும் நல்ல முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி மேலும் 406 வைத்தியர்களை எதிர்வரும் 27ம் திகதிக்கு முன்னர் இடைக்கால பயிற்சிக்காக அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த மாதத்திற்குள் தாதியர் சேவைக்காக இரண்டாயிரத்து 200 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இது தவிர குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களாக 222 பேர் அண்மையில் நியமனம் பெற்றனர். மேலும் 600 பேரை பயிற்றுவித்து இந்த சேவையில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதளவில் நாட்டின் சுகாதார துறையை சிறந்த மட்டத்திற்கு கொண்டு வருவது தமது இலக்காகும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
தும்பனை பிரதேச இணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |