மீண்டும் போராட்டக்களம்! இரத்தக்களரியை சந்திக்கப் போகும் இலங்கை: வெளியான எச்சரிக்கை
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 இலங்கையில் ஒரு மாதத்திற்குள் கோதுமை மா பிரச்னையை அரசாங்கம் தீர்க்காவிட்டால் நாட்டில் பாண் உட்பட பேக்கரி உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கறுப்பு சந்தையில் 25000 ரூபாய் வரை உயர்ந்த கோதுமை மாவின் விலை >>> மேலும்படிக்க
2 இலங்கை பெட்ரோலியக் கூட்டுறவு (CPC) அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டண முறையின் காரணமாக 400 நிரப்பு நிலையங்கள் மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் >>> மேலும்படிக்க
3 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவது குறித்து முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவின் மீள் அரசியல் பிரவேசம்!! நாமல் வெளியிடும் தகவல் >>> மேலும்படிக்க
4 நாளை (05) முதல் மீண்டும் எரிவாயு விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து உணவு பொதியின் விலைகளை குறைப்பது தொடர்பில் உணவக உரிமையாளர்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
உணவு பொதியின் விலைகளில் மாற்றம் ஏற்படுமா! வெளியாகியுள்ள தகவல் >>> மேலும்படிக்க
5 லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இதற்கமைய, நாளை (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! நாளை நள்ளிரவு முதல் மற்றுமொரு விலை குறைப்பு >>> மேலும்படிக்க
6 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் இந்த அரசாங்கத்தை அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரை மாத்திரமே நீடிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு வரும் ரணிலின் ஆட்சி! வெளியான பரபரப்புத் தகவல் >>> மேலும்படிக்க
7 இலங்கையில் ஞாபக மறதி (டிமென்சியா) நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டம்பர் 21ம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
2050இல் இலங்கையில் உள்ள அரை மில்லியன் பேருக்கு ஏற்படப் போகும் ஆபத்து! வெளியான பகீர் தகவல் >>> மேலும்படிக்க
8 வெளிநாட்டில் இருக்கும் நபர்கள் இலங்கையில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு லிட்ரோ எரிவாயுவினை பெற்றுக் கொடுக்கும் நடைமுறை அடுத்த வாரம் முதல் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
இலங்கையில் உள்ள நண்பர்களுக்கு டொலர்கள் கொடுத்து உதவப் போகும் வெளிநாட்டவர்கள்! அறிமுகமாகும் செயலி >>> மேலும்படிக்க
9 நாட்டில் அடுத்தகட்ட போராட்டம் இரத்தக்களரியில் முடிவடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் விசேட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அடுத்தகட்ட போராட்டம் இரத்தக்களரியில் முடிவடையும் - மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை >>> மேலும்படிக்க
10 ராஜபக்சர்களை கீழ்த்தரமாக விமர்சிக்க வேண்டாம். ராஜபக்சர்களின் எழுச்சி விரைவில் நடக்கும். உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் சூழ்ச்சிகளால் ராஜபக்சர்களின் அரசியல் பயணத்துக்கு ஒருபோதும் முடிவு கட்ட முடியாது என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்..
சூழ்ச்சிகளால் ராஜபக்சர்களின் அரசியலுக்கு முடிவு கட்ட முடியாது: மகிந்த எச்சரிக்கை >>> மேலும்படிக்க