சூழ்ச்சிகளால் ராஜபக்சர்களின் அரசியலுக்கு முடிவு கட்ட முடியாது: மகிந்த எச்சரிக்கை
ராஜபக்சர்களை கீழ்த்தரமாக விமர்சிக்க வேண்டாம். ராஜபக்சர்களின் எழுச்சி விரைவில் நடக்கும். உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் சூழ்ச்சிகளால் ராஜபக்சர்களின் அரசியல் பயணத்துக்கு ஒருபோதும் முடிவு கட்ட முடியாது என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை வருகை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“ராஜபக்சர்கள் தோற்கவும் இல்லை,தோற்கடிக்கப்படவும் இல்லை. சுயமாகப் பதவிகளிலிருந்து விலகிய அவர்கள் விரைவில் மீளெழுச்சி பெறுவார்கள்.
எதிரணியினரின் மதிப்பீடு

எதிரணியினர் ராஜபக்சர்களை கண்டபடி வசைபாடுகின்றனர். குறைத்து மதிப்பிடுகின்றனர். ராஜபக்சர்களின் அருமையும், திறமையும், எமக்கு ஆணை வழங்கிய மக்களுக்கு நன்றாக புரியும்.
உள்நாட்டு, வெளிநாட்டு சூழ்ச்சிகளால் ராஜபக்சர்களின் அரசியலுக்கு முடிவு கட்ட முடியாது.
தேர்தலில் முடிவு தெரியும்

தேர்தல் ஒன்று நடந்தால் அதில் ராஜபக்சர்களினதும் மொட்டு கட்சியினரினதும் கைகள் மீண்டும் ஓங்கும். அந்த தேர்தலில் எதிரணியினர் வழமை போன்று தோல்வியையே தழுவுவார்கள்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதை நான் வரவேற்கின்றேன்.
தனது மீள் அரசியல் பிரவேசம் தொடர்பில் அவர் சிறந்த முடிவை எடுப்பார்.”
என கூறியுள்ளார்.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri