கோட்டாபயவின் மீள் அரசியல் பிரவேசம்!! நாமல் வெளியிடும் தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவது குறித்து முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாய மீண்டும் அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும் என நாமல் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பியது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
பிறருக்காக முடிவு எடுக்கும் உரிமை எமக்கில்லை..
எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான் தீர்மானிக்க வேண்டும்.
அரசியலில் ஈடுபடலாமா வேண்டாமா என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும். மற்றவர்களுக்காக முடிவெடுக்கும் உரிமை எங்களுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி தனது முடிவை அறிவித்தவுடன் கட்சியின் நிர்வாக சபைக்கு அறிவிப்போம். அவருக்கு இலங்கையில் வசிக்கவும், அரசியலில் ஈடுபடவும் அனைத்து உரிமைகளும் இருக்கின்றது என்று மேலும் கூறினார்.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
