டொலர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! ஜனாதிபதி ரணிலின் அதிரடி நடவடிக்கை
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவரது நெருங்கிய அமைச்சர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க >>> கோட்டாபய இலங்கை வருவதனை விரும்பாத ரணில்
2 இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் மொத்த விலை குறைந்துள்ளது. புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.
மேலும் படிக்க >>> இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலை குறைந்தது
3 உலக தமிழர் பேரவை (GTF) உட்பட ஆறு தமிழ் சர்வதேச அமைப்புகள் மற்றும் 317 தனிநபர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு மதிப்பாய்வின் ஒரு பகுதியாக தடைப் பட்டியலில் 55 புதிய நபர்களையும் மேலும் மூன்று அமைப்புகளையும் அரசாங்கம் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க >>> புதிய நபர்களையும் மேலும் மூன்று அமைப்புக்களையும் தடைப்பட்டியலில் இணைத்துள்ள அரசாங்கம்!
4 எரிபொருளின் விலையில் இன்றைய தினம் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க >>> இன்று எரிபொருள் விலையில் மாற்றம்..!
5 இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 357.29 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க >>> அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு
6 இலங்கையில் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தீர்மானம் இலங்கை மின்சார சபையால் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>> இலங்கையில் மின் வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கப்படுகிறது!
7 இலங்கையில் இந்த வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று காலை புதுப்பிக்க எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இந்த வாரமும் கார்களுக்கான 20 லீட்டர் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.
மேலும் படிக்க >>> QR அட்டை நடைமுறை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
8 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டமைக்கான தெளிவான விளக்கத்தைப் பாதுகாப்பு அமைச்சு கூற வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க >>> புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்! பாதுகாப்பு அமைச்சிடம் விமலின் வலியுறுத்தல்
9 யக்கலமுல்ல பிரதேசத்தில் CDM இயந்திரத்தில் பணம் வைப்பு செய்ய சென்றவருக்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக பணம் கிடைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. எம்.எம்.தஹநாயக்க என்ற நபர் தனது மகனுடன் பணம் வைப்பு செய்ய சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் படிக்க >>> பணம் வைப்பு செய்ய சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
10 6 சர்வதேச புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சர்வகட்சி ஆட்சிக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக இருக்கலாம் என சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> ஜனாதிபதி ரணிலின் நடவடிக்கை! இலங்கை சந்திக்கும் டொலர் பிரச்சினைக்கு கிடைக்கவுள்ள தீர்வு...