பணம் வைப்பு செய்ய சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
யக்கலமுல்ல பிரதேசத்தில் CDM இயந்திரத்தில் பணம் வைப்பு செய்ய சென்றவருக்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக பணம் கிடைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
எம்.எம்.தஹநாயக்க என்ற நபர் தனது மகனுடன் பணம் வைப்பு செய்ய சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேர்மையான மனிதர்கள்
ஏற்கனவே பணம் வைப்பு செய்ய சென்ற நபர் அதனை உரிய முறையில் வைப்பு செய்யாமையினால் பணம் இயந்திரத்திலேயே சிக்கியிருந்தது.
இந்த நிலையில் அடுத்ததாக பணம் வைப்பு செய்ய சென்ற எம்.எம்.தஹநாயக்க இயந்திரத்தை அழுத்தும் போதும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்துள்ளது. அவர் அந்த பணத்தை வெளியே எடுத்துவிட்டு தனது பணத்தை வைப்பிட்டுள்ளார்.
குவியும் பாராட்டு
பின்னர் அந்த வங்கி அமைந்துள்ள பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
பொலிஸார் உரிமையாளரிடம் இந்த பணத்தை ஒப்படைத்துள்ளனர். மற்றவர்களின் பணம் எங்களுக்கு எதற்கு நம்பிக்கையுடன் செயற்பட்டால் நாமும் வெற்றி பெறலாம் என தஹநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பணத்திற்கு சொந்தமான உரிமையாளர் மிகவும் மகிழ்ச்சியடைந்ததுடன், அந்த நபரின் நேர்மைக்கு பாராட்டியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
