அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்! பொதுப் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்
சைபர் குற்றங்களை தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நேற்று (06.2.2026) பொல்பிட்டிய பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
புதிய பொலிஸ் பிரிவு
அத்தோடு, நாளொன்றுக்கு 23 முதல் 25 வரையான சைபர் குற்றங்கள் பதிவாகுவதாகவும், இது கணிசமான அளவு உயர்வு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்தக் குற்றங்களை வினைத்திறனுடன் விசாரணை செய்து தீர்ப்பதற்குத் தேவையான புதிய தொழில்நுட்பம், விசேட அறிவு மற்றும் பொலிஸ் திணைக்களத்தை நவீனமயமாக்கும் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.