எலிசபெத் மகாராணி மற்றும் பிடல் கஸ்ரோவுக்கு அடுத்து ஜனாதிபதி ரணிலுக்கு கிடைத்துள்ள ராஜயோகம்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 அடுத்த வாரம்(08 - 12) பாடசாலைகள் நடத்தும் நாட்களில் கல்வி அமைச்சு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, நாளை முதல்(08) ஆரம்பமாகும் புதிய வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும் படிக்க >>>பாடசாலை நடத்தப்படும் நாட்களில் மாற்றம்
2 நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கத்திற்கு முழுநேர நிதி அமைச்சர் தேவை என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க >>>நிதியமைச்சை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
3 எதிர்வரும் வாரங்களில் நாட்டில் மரக்கறிகளின் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>> மீண்டும் 50 வீதத்தால் உயரும் விலைகள்
4 புலம்பெயர் தொழிலாளர்கள் புதிய மின்சார வாகன திட்டத்துடன் சூரிய சக்தி அமைப்பை (Solar power system) கொள்வனவு அல்லது இறக்குமதி செய்ய வேண்டும் என்ற கட்டாய நடைமுறை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>>கட்டாய நடைமுறை நீக்கம்..!
5 வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார். அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. சரத் பொன்சேகா அரகலயவை “ஹைஜாக் “ பண்ணப் பார்க்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் படிக்க >>> ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள்
6 மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (எக்ஸிம்) வங்கி இடைநிறுத்தியுள்ளது.
மேலும் படிக்க >>>இலங்கைக்கு வழங்கவிருந்த கடனை நிறுத்திய சீனா
7 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜாதகம் மிகவும் பலமாக உள்ளதாக பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க >>>ஜனாதிபதி ரணிலுக்கு பெரும் அதிஷ்டம்
8 இலங்கையில் சமகால அரசியல் நெருக்கடி நிலையில் புதியதொரு மாற்றம் விரைவில் நிகழவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மற்றுமொரு பாரிய மாற்றம்
9 சர்வகட்சி அரசாங்கத்தில் இணையும் அனைத்து தரப்பினரும் தாராள மனப்பான்மையுடன் தியாயம் செய்பவர்களாக செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>மகிந்த விடுத்துள்ள விசேட அறிவிப்பு
10 துப்பாக்கி சூடு மற்றும் குற்றச் செயல்களை தடுப்பதற்கான அதிகாரங்கள் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்