மீண்டும் 50 வீதத்தால் உயரும் விலைகள்
எதிர்வரும் வாரங்களில் நாட்டில் மரக்கறிகளின் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
40 தொடக்கம் 50 சதவீதத்தால் இவ்வாறு மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் குழு தெரிவித்துள்ளது.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக விளைச்சல்கள் சேதமடைந்துள்ளமையினால் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.
மலைநாட்டு மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும்..
மலைநாட்டு மரக்கறிகளின் விலை 60 முதல் 70 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என்றும் அந்த குழு குறிப்பிட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் கரட் மொத்த விற்பனையின் கீழ் 260 ரூபா முதல் 290 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவா ஒரு கிலோகிராம் 230 ரூபா முதல் 260 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
லீக்ஸ் 130 ரூபாவிலிருந்து 170 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் மரக்கறிகளின் விலை 40 முதல் 50 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.