துப்பாக்கி சூடு சம்பவங்கள்! பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்: பிரதமர் தகவல்
துப்பாக்கி சூடு மற்றும் குற்றச் செயல்களை தடுப்பதற்கான அதிகாரங்கள் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொஸ்கம, பொரலுகொட ஸ்ரீ வர்தனாராமயவிற்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் முயற்சி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் அமைதியான சூழலை ஏற்படுத்த அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சில குழுக்களுக்கு விநியோகிக்கப்பட்ட துப்பாக்கிகள் எங்கள் வசம் உள்ளதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த அரசாங்கத்தினால் இவ்வாறான ஆயுதங்களை கைப்பற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும், அதற்கான செயற்பாடுகளை நிறைவு செய்ய முடியவில்லை.
தனிப்பட்ட தகராறுகள்
மேலும், தனிப்பட்ட தகராறுகளை சமாளிப்பதற்காக சில நபர்கள் இவ்வாறான ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் தற்போதைய நிர்வாகம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய அமைதியான சூழலை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது”என கூறியுள்ளார்.