புதிதாக ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்காக காத்திருப்பு
புதிதாக நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவிப் பிரமாணம் செய்வதற்காக ஐந்து பேர் காத்திருப்பில் உள்ளனர்.
எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்வதற்காக காத்திருப்பில் உள்ளனர்.
17ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள பைசர் முஸ்தபா, ஐக்கிய மக்கள் சக்தியின் சுஜீவ சேனசிங்க, மனோ கணேசன், முஹம்மட் இஸ்மாயில் முத்து மொஹம்மட், நிசாம் காரியப்பர் ஆகியோரே இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வின் போது இவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam