இலங்கை கடற்படைக்கு கிடைத்த பெரும் தொகை டொலர்
வணிகக் கப்பல் பாதுகாப்பு குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் மூலம் கடந்த நான்கு மாதங்களில் கிட்டத்தட்ட 600,000 அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை ஈட்டியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையின் செயல்பாட்டு இயக்குநர் ஜெனரல் ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வா இன்று (12.02.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் முற்றுகைக்குள் சிக்கியிருந்த கோட்டாபய : ராஜபக்சர்கள் ஆட்சி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்
கடல் பாதுகாப்பு
கடந்த ஆண்டு அக்டோபர் 3 ஆம் திகதி வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை செய்து கொண்டு வணிகக் கப்பல் பாதுகாப்பு குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளை கடற்படை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, கடந்த நான்கு மாதங்களில் நடத்தப்பட்ட 323 நடவடிக்கைகள் மூலம் கடற்படை 598,250 அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை ஈட்டியுள்ளது.