அமெரிக்காவின் முற்றுகைக்குள் சிக்கியிருந்த கோட்டாபய : ராஜபக்சர்கள் ஆட்சி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்
கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் அவரது செயற்பாடுகளை அமெரிக்க புலனாய்வுத் துறையினர்(CIA Central Intelligence Agency) அவதானித்து வந்ததாக தன்னிடம் குறிப்பிட்டார் என்று அசங்க அபேகுணசேகர (Asanga Abeyagoonasekera) தெரிவித்துள்ளார்.
அசங்க அபேகுணசேகர (Asanga Abeyagoonasekera) பூகோலவியல் அரசியல், சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர், வருகைத்தரும் விரிவுரையாளர், ஆசிரியர் மற்றும் கட்டுரையாளராகும். முன்னாள் அரசியல்வாதி ஒசி அபேகுணசேக்கரவின் (Osi Abeyagoonasekera) மகனாவார்.
அமெரிக்க புலனாய்வுத் துறையின் செயற்பாடு
அரகலய போராட்டத்தின்போது மறைக்கப்பட்ட பல உண்மைகளை வின்ட்ஸ் ஒப் சேன்ஜ்(Winds of Change) (The Millennium Project, USA) என்ற ஆங்கில நாவலில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நாவலில், ஈஸ்டர் தாக்குதல், நாட்டில் ஏற்பட்ட வங்குரோத்து நிலை தொடர்பாகவும் பல திடுக்கிடும் கதைகளை எழுதியுள்ளார். அந்த நூலில் அரகலய போராட்டம் தொடர்பில் பல முக்கிய விடயங்களை குறிப்பிட்டிருக்கின்றார்.
2022 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து அனுப்புவதற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாட்டுக்கு அமெரிக்க புலனாய்வு பிரிவே ஆணையிட்டதாகவும், அதை அவர்களே இதை இயக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு முன்னர் அரகலய போராட்டம் தொடர்பில் ஐந்து நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அதில் எதிலும் CIA தொடர்பில் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்கவில்லை.
கோட்டாபய மறைத்த பல விடயங்கள்
கோட்டாபய எழுதிய நூலில் கூட இது தொடர்பில் குறிப்பிடவில்லை. அமெரிக்க CIA மற்றும் கோட்டாபய தொடர்பில் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் பிரபல சிங்கள, ஆங்கில நாளேடுகளில் இது தொடர்பில் தெளிவான கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
ஆனால் அரசியல் அரங்கில் இது தொடர்பில் ஒன்றும் பேசப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் கோட்டாபயவிடம் வினவிய போதும் அவர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லையாம்.

2019 ஆம் ஆண்டு கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்ற நாளில் இருந்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் அதிகாரி ஒருவர் தனது செயற்பாடுகளை உண்ணிப்பாக அவதானித்து வந்ததாகவும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி ஒருவர் அமெரிக்க புலனாய்வு பிரிவின் பிடியில் இருந்துள்ளமை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விடயமாகும். அசங்க அபேகுணசேகர, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரிடம் அரசியல் நியமனங்களை பெற்றுக் கொண்டவர்.

மகிந்த காலத்தில் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தின் தலைவர், நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு கமிட்டியின் பிரதானியாகவும் செயற்பட்டுள்ளார்.