கோட்டாபய விதித்த கடுமையான நடைமுறையை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை
கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட செய்தி வலைத்தளங்களை பதிவு (news web site registration) செய்வதற்கான கடுமையான நடைமுறையை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை கடிதம் ஒன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் கருத்துச் சுதந்திர உரிமையைப் பாதுகாப்பதற்கான கோரிக்கையை முன்கொண்டு 2012 முதல் செய்தி வலைத்தளங்களைப் பதிவு செய்வதற்கான சட்டங்கள் நிறுவப்பட்டன.
2020 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நடைமுறை
அதன் பின்னர், 2020 ஆம் ஆண்டில், இந்த செய்தி வலைத்தளங்களின் வருடாந்திர பதிவைப் புதுப்பிக்கும் (news web site registration) போது பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அவதானிப்பு அறிக்கையைப் பெறுவதை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச கட்டாயமாக்கினார்.

அவ்வாறாயின், பாதுகாப்பு அமைச்சும் தேசிய புலனாய்வு திணைக்களமும் இணைந்து செய்தி வலைத்தளத்தின் பதிவைப் புதுப்பிப்பதா இல்லையா என்பது குறித்த இறுதி தீர்மானத்தை வெகுஜன ஊடக அமைச்சுக்கு அறிவித்த பின்னரே வருடாந்திர பதிவைப் புதுப்பிக்க அனுமதி வழங்கப்படும்.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி
இலங்கை போன்ற ஒரு ஜனநாயக நாட்டிற்கு, ஊடகத் துறையுடன் எந்த தொடர்பும் இல்லாத பாதுகாப்புத் தரப்பு செய்தி வலைத்தளத்தை நடத்துவதா இல்லையா என்பதை முடிவு செய்வது பொருத்தமானதா?

இந்தப் பாதுகாப்பு அனுமதி அறிக்கையின் அடிப்படையில் பதிவை புதுப்பித்தல் முறையை இரத்து செய்து, 2020 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போலவே, வருடாந்திர பதிவு புதுப்பித்தல் கட்டணத்தையும், அனைத்து விவரங்களுடன் சேர்த்து வசூலிக்க வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாக அவரின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.