டில்வின் சில்வா சந்தித்த கேரள மாநில முக்கிய தலைவர்கள்
இந்தியா சென்றுள்ள ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மற்றும் குழுவினர் கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan) மற்றும் கேரள மாநில அமைச்சர்களை சந்தித்துள்ளது.
இந்திய கலாசார உறவுகள் கவுன்சிலின் (ICCR) அழைப்பின் பேரில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த டில்வின் சில்வா மற்றும் குழுவினர் நேற்று (11.02.2026) கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இரு தரப்பு ஒத்துழைப்பு
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (Marxist) தலைமைச் செயலாளர் எம்.ஏ. பேபி (M.A Baby) மற்றும் மத்திய குழுவின் பல உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
மக்களின் நலனுக்காக, ஒரு மாநிலமாக கேரளாவில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், கல்வியறிவை 100 வீதம் ஆக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வறுமையை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது.
எதிர்காலத்தில், இலங்கையுடன் ஒத்துழைப்பை வளர்ப்பது மற்றும் பல்வேறு துறைகள் மூலம் பரஸ்பர வளர்ச்சியை மேம்படுத்த கூடிய மற்றும் இரு கட்சிகளுக்கும் இடையே உறவுகளை வளர்ப்பது குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.



