16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அரிதான நிகழ்வு..!
அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, ஒரே நாளில் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
வெவ்வேறு கொலை வழக்குகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அந்தோணி டாரெல் ஹைன்ஸ் (66), ஜெரமி வில்லியம்ஸ் (41) மற்றும் கார்லோஸ் குயஸ்டா-ரோட்ரிக்ஸ் (71) ஆகிய மூவருக்கும் முறையே டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய மாநிலங்களில் ஊசி மூலம் விஷம் செலுத்தி மரண தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரிதான நிகழ்வு
அமெரிக்காவில் சமீபகாலமாக மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது கணிசமாக அதிகரித்து வருவதையே இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுவதாக சமூக ஆர்வலர்களும் சட்ட நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2021ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2025-ஆம் ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மொத்த மரண தண்டனைகளில் சுமார் 40 சதவீதம் புளோரிடா மாநிலத்தில் மட்டுமே நடந்துள்ளது.
அண்மைக்காலக் கருத்துக்கணிப்புகள்
அம்மாநில ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கொண்டுவந்த சட்டத் திருத்தங்களே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பதவிக் காலத்தில் மரண தண்டனைகளுக்கான தடைகளை நீக்கி, கடுமையான தண்டனைகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்ததும் இதன் பின்னணியாகப் பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், அமெரிக்க பொதுமக்களிடையே மரண தண்டனைக்கான ஆதரவு 52 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும், நீதிமன்ற நடுவர் மன்றங்கள் மரண தண்டனைத் தீர்ப்புகளை வழங்குவது கணிசமாகக் குறைந்து வருவதாகவும் அண்மைக்காலக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri