ட்ரம்ப் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து எழுந்துள்ள விமர்சனம்
பாலியல் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், அந்நாட்டின் நீதித்துறை அதற்கான நடவடிக்கைகளைச் சரியாகச் செயல்படுத்தவில்லை என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றப் பதிவுகளை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள இந்த அறிக்கையின்படி, நடப்பு ஆண்டின் முதல் பாதியில் பாலியல் கடத்தல் தொடர்பான வழக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
ட்ரம்ப் அரசின் நடவடிக்கை
பாலியல் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அனுபவமிக்க சட்டத்தரணிகள் மற்றும் முகவர்கள் பலர் பணியை விட்டு விலகியதும், ட்ரம்பின் தீவிரக் குடிவரவுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் அதிகளவில் திருப்பி விடப்பட்டதும் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
அத்துடன் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்து வந்த தொண்டு நிறுவனங்களுக்கான நிதியுதவி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாலும் தாமதமானதாலும் வழக்குகள் குறைந்துள்ளன.

இதன் காரணமாகப் பல தீவிர விசாரணைகள் பாதியிலேயே முடங்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் அரசு நிறுவனங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை குறைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள், பாலியல் கடத்தலையும் சிறுவர் சுரண்டலையும் தடுப்பது தங்களின் முக்கிய முன்னுரிமையாகத் தொடர்ந்து நீடிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri