கொழும்பு மாநகர சபை எல்லையில் இறுதிக்கிரியை செய்வது தொடர்பில் விசேட அறிவிப்பு
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் இறந்த உடல்களை தகனம் செய்வதற்கு இனிமேல் கட்டணம் வசூலிப்பதில்லை என்று கொழும்பு மாநகர சபை முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஒரு உடலை தகனம் செய்வதற்கு வசூலிக்கப்படும் பத்தாயிரம் ரூபாய் கட்டணத்தை முற்றிலுமாக இரத்துச் செய்ய கொழும்பு மாநகர சபை முடிவு செய்துள்ளது.
கொழும்பு மாநகர சபை மேயரின் அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் இது தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (10.02.2026) நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மேயர் வ்ராய் கெல்லி பல்தாசர் (Vraie Cally Balthazaar) இதை அறிவித்துள்ளார்.

அதன்படி, இஸ்லாமிய இனத்தவரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு வசூலிக்கப்படும் ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் கட்டணமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இனிமேல், கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வாழும் மக்களுக்கு இறந்தவர்களின் உடல்களை இலவசமாக தகனம் செய்யும் வாய்ப்பு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.