ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயர், இலச்சினை (Logo) மற்றும் வர்த்தகப் புகைப்படங்களைப் பயன்படுத்தி வட்ஸ்அப் (WhatsApp) மற்றும் ஃபேஸ்புக் (Facebook) ஊடாகப் பரப்பப்படும் போலிச் செய்திகள் குறித்து அந்த நிறுவனம் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இத்தகைய தகவல்கள் முற்றிலும் போலியானவை மற்றும் மோசடியானவை என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
போலிச் செய்திகள்
அத்துடன், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒருபோதும் வட்ஸ்அப் அல்லது சமூக வலைத்தளங்கள் வாயிலாக தனிப்பட்ட விபரங்களையோ அல்லது கொடுப்பனவுகளையோ (Payments) கோருவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சமூக ஊடகங்களில் வரும் நம்பகத்தன்மையற்ற லிங்குகளை (Links) எக்காரணம் கொண்டும் க்ளிக் செய்ய வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு விபரங்கள், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) அல்லது வங்கி அட்டை விபரங்களை எவருடனும் பகிர வேண்டாம்.
அவசர எச்சரிக்கை
ஏதேனும் சலுகைகள் அல்லது அறிவிப்புகள் தொடர்பான சந்தேகங்கள் இருப்பின், அவற்றை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளம், கைபேசி செயலி அல்லது சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்கள் ஊடாக மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உத்தியோகபூர்வ அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நிர்வாக முறை மாற்றப்படாவிட்டால்..என்பிபி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா