இலங்கை மருத்துவ ஆணைய நியமனங்கள் குறித்து எழுந்துள்ள சர்ச்சை
இலங்கை மருத்துவ ஆணையகத்துக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள நிர்வாக உறுப்பினர்கள் தொடர்பில் அரசாங்க மருத்துவ நிபுணர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
முன்னைய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் காலத்தில் அவரது ஆசீர்வாதத்துடன் மருத்துவ ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டிருந்த பேராசிரியரையே தற்போதைய சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் நியமித்துள்ளமை பெரும் அதிர்ச்சியளிப்பதாக அரசாங்க மருத்துவர்கள் சங்கம் சுட்டிக்காட்டிள்ளது.
கடும் எதிர்ப்பு
அத்துடன், கடந்த காலத்தில் முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்னவின் தனிப்பட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடமையாற்றிய ஒருவரும் குறித்த நிர்வாக உறுப்பினர் குழவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கு மேலதிகமாக தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கும் விடயத்தில் சார்பான நிலைப்பாட்டைக் கொண்ட ஒருவரும் மருத்துவ ஆணையகத்தின் நிர்வாகக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிர்வாகத்திறமையற்ற, முறைகேடான செயற்பாடுகளுடன் தொடர்புடைய இவ்வாறான நபர்களை மருத்துவ ஆணையகத்திற்கு நியமித்திருப்பதன் மூலம் அதன் நம்பகத்தன்மை கெட்டுப்போயுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.



