கண்டிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்ட விதிகளை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு
சிறுவர்கள், பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் கண்டிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்ட விதிகளை ரத்து செய்ய அரசாங்கம் முன்வந்துள்ளது.
அதன்படி, 18 வயதை சட்டப்பூர்வ திருமண வயதாக மாற்றும் வகையில் சட்டம் திருத்தப்பட உள்ளது.
வர்த்தமானி வெளியீடு
இந்த விதிகளை ரத்து செய்யும் கண்டிய திருமணம் மற்றும் விவாகரத்து (திருத்தம்) சட்டமூலம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து குடிமக்களுக்கும் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதாக 18 வயதை ஆக்குவதற்கு நீதி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமணம் வயதெல்லை
இதற்கிடையில், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் 18 வயதை குறைந்தபட்ச வயதாக மாற்றுவதற்கும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் 18 வயதுக்குட்பட்ட எவருக்கும் திருமணத்திற்கு வழி வகுக்கும்
பொய்யான பிரகடனங்களில் கையெழுத்திடுபவர்களை தண்டிக்கும் வகையில் சட்டங்களும்
திருத்தப்பட உள்ளன.