எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம்! அரசியல் அழுத்தத்தினால் மீள வழங்கல்
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்று இலங்கை மின்சார சபைக்கு பெருந்தொகை மின் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அழுத்தம்
இதன் காரணமாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்ட போதும் சில நிமிடங்களில் அரசியல் அழுத்தம் காரணமாக மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் விசனம்
எனவே சாதாரண மக்கள் சிறிய தொகைகளை செலுத்த தவறும் போது மின் துண்டிப்புகளை செய்யும்
மின்சார சபையினர் அரசியல்வாதிகள் இலட்சக்கணக்கில் பணம் செலுத்த வேண்டியதாக உள்ள
போதிலும் அவர்களுக்கு மின் துண்டிப்பை மேற்கொள்வதில்லை என்பது பரவலான
குற்றச்சாட்டாக உள்ள நிலையில்,தற்போது அரசியல்வாதிகளின் உறவினர்கள் மின்
கட்டணம் செலுத்தாத போதிலும் அவர்களுக்கு மின் துண்டிப்பை மேற்கொள்ளாது
மின்சார சபை தவிர்ப்பது பலர் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.