நாட்டை ஊடறுத்துச் செல்லும் கானி புயல் - அபாய வலயத்திற்குள் இலங்கை
மலேசியாவின் பிந்துலு(Bintulu) பகுதிக்கு வடக்காக ஒரு காற்றுச் சுழற்சி நேற்று (25.11.2026) உருவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
புயலின் முழுப் பாதிப்பு வலயம்
மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இது நாளை( 27.11.2026) மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து அந்தமான் தீவுகளுக்கு தெற்காக நகரும்.
அதன்பின் மத்திய வங்காள விரிகுடாவிற்கு வரும்போது அது புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு மாலைதீவு இட்ட 'கானி( Kaani)' என்ற பெயர் வழங்கப்படும்.

இந்த புயல் எதிர்வரும் 05.12.2026 அன்று இரவு திருகோணமலையின் ஊடாக ( கொட்டியாரக்குடாவுக்கு வடக்காக) கரையைக் கடந்து அதன் பின் மேற்கு நோக்கி நகர்ந்து, வவுனியாவை ஊடறுத்து மன்னார் மற்றும் புத்தளத்தினூடாக அரபிக் கடலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயலின் முழுப் பாதிப்பு வலயத்திற்குள் இலங்கை முழுவதும் உள்ளடங்குகின்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.