இலங்கையில் அதிகரிக்கும் மரணங்கள் - சுகாதார அமைச்சுக்குள் மறைக்கப்படும் மர்மங்கள்
மூன்று மாதங்களில் சுமார் 10 ஒவ்வாமை மரணங்கள் ஏற்படுவது இயல்பானதா என்பதை சுகாதார அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சமல் சஞ்சீவ இந்த விடயத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மருந்துப் பாவனையால் நோயாளிகள் உயிரிழந்தமை தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
நோயாளி மரணம்
குழு நியமித்து 48 மணித்தியாலங்களின் பின்னர் கம்பஹா வைத்தியசாலையில் மற்றுமொரு நோயாளி மரணம் பதிவாகியுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
Ceftazidime எனும் சக்தி வாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பியின் 11வது ஊசியின் பின்னர் மரணம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஊடக அறிக்கை
அது ஒரு போதும் சாதாரண நிலைமை அல்ல எனவும் சுகாதார அமைச்சின் உண்மையான பிரச்சினையை மூடி மறைப்பதற்காக வெளியிடும் ஊடக அறிக்கை ஊடாக அமைச்சு மக்களை நகைச்சுவையாக எண்ணியுள்ளார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.