திருப்தியடையக்கூடிய நல்ல வருமானம் : உச்சமட்டத்தில் மீள் ஏற்றுமதி நடவடிக்கைகள்
வருவாய் ஈட்டும் விடயத்தில் துறைமுகம் எட்டியுள்ள அடைவுகள் குறித்து மிகவும் திருப்தியடைய முடியும். நல்ல வருமானம் ஈட்டி வருகின்றோம் என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மீள் ஏற்றுமதி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதார மையமாக துறைமுகம் காணப்படுகிறது. நமது நாட்டில் கொள்கலன் மீள் ஏற்றுமதி நடவடிக்கைகள் 1981 இல் ஆரம்பமாகிய போதும், தற்போது எமது கொள்கலன் மீள் ஏற்றுமதி நடவடிக்கைகள் மிகவும் உச்சமட்டத்துக்குச் சென்றுள்ளன.
ஆண்டுக்கு 8.5 மில்லியன் கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்து வருகிறோம். உலகின் சிறந்த கொள்கலன் மீள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.
பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் இந்தியாவில் உள்ள சிறிய துறைமுகங்களில் இருந்து இந்த நாட்டுக்குக் கொண்டு வரப்படும் கொள்கலன்கள் பெரிய கப்பல்கள் மூலம் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மேலும், பெரிய கப்பல்கள் மூலம் நாட்டுக்கு கொண்டு வரப்படும் கொள்கலன்கள் சிறிய கப்பல்கள் மூலம் சிட்டகாங் போன்ற துறைமுகங்களுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |