நெருங்கும் பொதுத் தேர்தல்! தீவிரப்படுத்தப்படும் கண்காணிப்புகள்
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கையில் 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
உள்நாட்டு, வெளிநாட்டவர்கள் உள்ளடங்களாக 8ஆயிரம் பேர் இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பொதுத் தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக பதிவாகும் என்பதால் இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தபால்மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31, நவம்பர் முதலாம் மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெற உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தீவிர கண்காணிப்பு
குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களுக்கு நவம்பர் 7 ஆம், 8 ஆம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் வன்முறை சம்பவங்கள் அதிகமாக பதிவாகும் என்பதால் கண்காணிப்பு நடவடிக்கைகளும், பொலிஸ் பாதுகாப்பு அனைத்து தொகுதிகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இம்முறை பெப்ரல் அமைப்பு, 30 வெளிநாட்டவர்கள் உட்பட 5000 கண்காணிப்பாளர்களை கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 37 நிமிடங்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
